சித்திரை பெண்ணே!
என் மனதில்
முத்திரை பதித்த மணியே!
என்னைத் தமிழை
மறக்கச் செய்தவளே!
உன்னைக் கண்டதும்,
என் முத்தமிழும்
உன்பின் ஊர்வலம் செல்லுதடி!
கத்திக்குத்தையும் தாங்கிடும்
என் இதயம்
உன் கடைக்கண் பார்வையில்
சிக்கித் தவிக்குதடி!
இதயத்தில் போதாதென்று
அறிவிலும் ஏற்றினேன் உன்னை..
சிந்திக்கும் நேரமெல்லாம்
திகட்டிட நீ வந்தாய்..
என் காதல் கடலின்
கலங்கரை விளக்கே!
என்னைக் கவிதைக்கு அர்ப்பணித்தேன்.
அதை உனக்குச் சமர்ப்பித்தேன்.
-மழைக்கனல்


0 comments:
Post a Comment