Thursday, December 22, 2011

மரத்தின் அறம்



மரம்..
வெறும் கட்டடங்களின் உரம் அல்ல.
அவை, வாழ்க்கையின் தரம். 

நம்மைக் காட்டிலும்
நம் பண்பைக் காட்டிலும் உயர்ந்தவை.
நன்மை கொடுத்துப்  பழகியதன்றி
நம்மை கெடுத்துப் பழகியதில்லை.


அவை கிடைத்தற்க்கரிய வரம்.
பசுமை செல்வத்தின் சிரம்.
இயற்கை வளத்தின் அச்சாரம்.
மனிதனின் ஊனக்கண்களுக்குத் தெரியாத
மதிப்பில்லா வைரம்.

உயிரை அழித்து சுவரை எழுப்பி
யாரோடு வாழ இந்தப் போராட்டம்?
வளத்தை மழித்து வனங்கள் ஒழித்து
எந்த நிம்மதி தேடி இந்த வெறியாட்டம்?
மரங்கள் என்னும் கரங்கள் வீழ்த்தி
மழை என்னும் ரேகையைத் தேடுவதோ?

வாய்மைக்கு மட்டும் அல்ல..
தூய்மை காற்றுக்கும் தான் பஞ்சம்.
அறியாமை என்னும் போர்வைக்குள்
இன்னும் ஏன் தஞ்சம்?

மரத்தை உவமை கொண்டு திட்டாதே மனிதா..
அவை உன்னைக் காட்டிலும் சிறந்தது.
இயற்கை, கடவுளின் முதல் தாரம்.
இந்த உண்மை புலப்பட
உனக்கில்லை வெகு தூரம்..
                                                                                            -மழைக்கனல்

0 comments:

Post a Comment