ரசிகனுக்கு இவள் பொன்சிலை,
திரைமறைவிலோ கறிவேப்பிலை.
ஆடைகளோ ஏராளம்
கவர்ச்சி தான்
இவளிடம் தாராளம்
கரங்களின் விரல்களாய்
இவள் இல்லை.
வளர்ந்தால் வெட்டப்படும்
நகங்கள்தான் இவள்.
திரைமறைவிலோ தன்மானம்
இழக்கின்றாள்.
திரையிலோ போலி வெகுமானம்
பெறுகின்றாள்.
வாய்ப்புக்காக தன்னையே
வழங்குகின்றாள்.
வாழ்க்கை கெட்டு நடுவழியில்
செல்கின்றாள்.
இவளின் நிலை மாற தவறினால்
திரையுலகிற்கு வெட்கம்.
அதுவரை திரைக்கதவுகள்
நாயகன் கைப்பக்கம்.
-மழைக்கனல்
-மழைக்கனல்


0 comments:
Post a Comment