என் உள்ளம் ஒரு அட்சய பாத்திரம்.
அதில் அன்பும் காதலும்
அளவில்லாமல் சுரக்கும்.
அன்பைப் பகிர்ந்தேன்
அனுதினமும் அனைவரிடமும்.
ஆனால் காதலை மட்டும்
களைந்தெறிந்தேன் சலனமில்லாமல்.
கண்ணீர் திவளைகள் கரை உடைந்து
உலகிற்கு பறை சாற்றும் முன்னே
அதைக் கவிதையாக்கி
கலைஞன் ஆகிக் கொள்கிறன்.
நான் தேடி போன காதல்கள்
மனதில் போர்க்களங்களாய் புதைந்தது.
என்னை நாடி வந்த காதல்கள்
நெஞ்சில் நளினமில்லாமல் நைந்தது.
அன்பின் வரமும்
நெஞ்சில் உரமும்
போதாதென்றால்,
காதலின் அளவுகோல் தான் என்ன?


0 comments:
Post a Comment