Sunday, February 12, 2012

வர்ணஜாலமே..



(தேவதையாம் தன் தங்கையைக் கொஞ்சும்
ஒரு அண்ணனின் பாடல்)

என் கண்ணின் மணி அல்ல நீ!
ஆனால்,
நீ இல்லா அமைப்பு
புருவம் இல்லா உருவம் அது.

என் நகத்தின் தசை அல்ல நீ!
ஆனால்,
என் அகத்தினைப் பிரதிபலிக்கும்
முகம் நீ!

என் புவியின் வளி அல்ல நீ!
ஆனால்,
என் வனத்தில் நறுமணம் கமழும்
பூஞ்சோலை நீ!

என் கிழக்கின் இரவி அல்ல நீ!
ஆனால்,
என் தடம் மாறா வழிக்காட்டும்
திசைமுள் நீ!

என் வாழ்க்கை கட்டிடத்தின் தூண் அல்ல நீ!
ஆனால்,
என் கனவுகளுக்கு வலு சேர்க்கும்
கருத்தா நீ!

என் மெய்யின் உயிர் அல்ல நீ!
ஆனால்,
என் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும்
'ழ'கரம் நீ!

நீ இன்றி கடந்திட முடியும் வாழ்வை..
ஆனால்,
வண்ணங்கள் அறியா காளை போல.
வசந்தங்கள் அற்ற கோடை போல.

நாளும் நீ வலம் வர வேண்டும்,
தமையனுக்கு தூண்டுகோளாய்.
தந்தைக்கு ஊன்றுகோலாய்.
வாழிய நீ வர்ணஜாலமே!!

பொருள்:
வளி - காற்று
இரவி - சூரியன்

0 comments:

Post a Comment