Thursday, March 22, 2012

மழை ரசம்


மேகங்கள்
புணர்வதால் வழியும்
காதல் ரசம்..

Monday, February 27, 2012

தேடல்


கல்வியைத் தொலைத்து விட்டு,
வாழ்க்கையைத் தேடிய போது தான்
நொந்து கொண்டேன்,
"ஹார்மோன்" சுரப்பிகளை..

கண்ணாமூச்சி



தேவதைகள்
கண்ணாமூச்சி ஆடுமென்பதை,
நீ
கண் சிமிட்டும் போதே அறிந்தேன்.

புயலுக்குப் பின்னே..



மழை ஓய்ந்த பின்னும்
ஓயவில்லை நீரின் இரைச்சல்.
வான்நீர் துளிகள் அல்ல,
கண்ணீர் துளிகள்..

Sunday, February 12, 2012

நகர வாழ்க்கை



இந்த சுதந்திர நாட்டிலே,
நாகரிக பெயராலே,
குற்றம் செய்யாமலேயே
சிறையில் வாழும்
நரக வாழ்க்கை..